Saturday, March 29, 2008

என் கடமைகளில் முதன்மை


எனது கடமைகள் எங்கே என்பதை நான் தெளிவாக அறிந்துள்ளேன் திருநங்கைகள் மற்றும் பாலினத்தால் மாறுபட்டவர்கள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுவது மிக மிக அவசியம். ஏனெனில் நாளைய தலைவர்கள் அவர்கள்தான். இந்த நாட்டின் சட்டம், அரசியல், கொள்கைகள் இவற்றை நிர்ணயிக்கப்போவது அவர்கள்தான். அவர்கள் நெஞ்சங்களில் உள்ள அறியாமை என்ற நஞ்சை அகற்றி உண்மை என்ற மருந்தை புகட்டுவது என் கடமை. இதில் சவால்கள், அவமானங்கள், இனிய அனுபவங்கள் எல்லாமே நேரக்கூடும் என்பதை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.
கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு செல்கிறேன். மேலும் பல கருத்தரங்கங்களுக்கும் செல்வேன். எழுத்துக்களை வாசிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை. எனவே நேருக்கு நேர் சந்திப்புகளும், உரையாடல்களும், செமினார்களுமே ஆரம்பத்தில் மாற்றங்களின் அசைவுக்கு உதவும். குறிப்பாக சமூகவியல், சமூகசேவை பற்றிய பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகவும் தேவை.

1 comment:

சிவசுப்பிரமணியன் said...

தங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும். இனி வரும் காலத்டில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படும் ஒன்றாகிறது. முதலில் திரைப்படங்களில், பாலினத்தால் மாறுபட்டவர்களை கேலி செய்யும் மனப்பான்மை ஒழிய வேண்டும். ஏன் இதை சொல்கிறேன் என்றாலிளைஞர்களி பெரிதும் பாதிக்கும் ஒரு ஊடகமாக திரைப்படங்கள் ஆகிவிட்டன. அதனால் இந்த மாற்றம் அவசியமன ஒன்றாகிறது