Thursday, April 17, 2008

ரோஸ் கல்கி நட்பு..






ரோஸ் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சியை வழ்ங்குகிறாள். சென்ற வாரம் ஒரு முக்கிய திருநங்கைகள் சந்திப்பில் ரோசும் நானும் சந்தித்தோம். திருநங்கைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான சந்திப்பு. பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். சந்தித்த நிமிடம் முதல் இரண்டு நாட்கள் பிரியவில்லை. பீச், ஷாப்பிங், சும்மா பெப் வண்டியில் ஊர் சுற்றுவது என்று மிக மிக ரசித்தோம் ஒவ்வொரு நிமிடமும்.



இரவுகளில் பெண்கள் சென்னையில் தனியாக பயணிக்க முடியாது என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். இரண்டு சக்கர வண்டியில் எங்களால் தனியாக போகமுடியவில்லை. ஆண்களின் கிண்டலும், அழைப்புகளும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் ரோஸ் மிகவும் கோபப்பட்டாள். ஒரு இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் எங்களை வெகுதூரம் தொடர்ந்துவந்தது மிகுந்த வேதனையை உண்டாகியது. ரோஸ் அந்த ஆளை அடிக்காத குறைதான். இருவரும் கண்டித்து அனுப்பினோம். . ஆண்கள் இத்தனை வெறியோடு அலைகிறார்கள் என்று நினைக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது.

3 comments:

சிவசுப்பிரமணியன் said...

தங்களின் வாதம் சரியானதே... சென்னை போன்ற மாநகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அச்சம் தரும் நிலையில் தான் இருக்கிறது.. சமீபத்தில் புது தில்லியில் நடந்து வரும் கொலைகளும், மானபங்க நிகழ்ச்சிகளும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன. இதற்கு ஆண்கள் மட்டும் காரணமாக இருக்கிறார்களா.. இல்லை பெண்களின் கலாச்சார முன்னேற்றம் என்று அவர்கள் நம்பி வரும் நடை உடை பாவனைகளும் காரணமா என்ப்து ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாகிறது.

ஜெய்லானி said...

mukkiyama pengalin dress.

Nithi... said...

ஹ்ம்ம்ம்ம் என்னை செய்வது ரொம்ப மோசமா இருகாங்க சில ஆண்கள்.......

இதை படிக்கும் போது மனது மிகவும் வருத்தப்படுகிறது
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்