அனுதாபமும், பரிதாபமும் அவர்களிடமே இருக்கட்டும்..

திருநங்கைகள் மேல் அனுதாபமும், பரிதாபமும் கொள்வது தேவையற்றது என்பது என் கருத்து. எங்களுக்குரிய உரிமைகளை தரவேண்டும். கேலி செய்யும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், பரிதாபப்பட்டு எங்களின் சக்தியை முடக்கும் மனிதர்களும் உண்டு. எங்களை சமமாக மதிக்கவேண்டும். சகமனுஷி என்ற உணர்வு இருந்தாலே போதும். பரிதாபப்படுவதால் என்ன நன்மை?

துன்பப்படும் நங்கைகளுக்கு உதவவேண்டும். ஆனால் இரப்பவர்க்கு அல்ல. வணிகத்தலங்களில் கைதட்டி பிச்சை எடுப்பவர்களின்மேல் எனக்கு கோபம் உண்டு. பலர் பயந்துதான் பணம் கொடுக்கிறார்கள். அவர்களின் அந்த பயமே வெறுப்பாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிச்சை எடுக்கும் நங்கைகள் சொல்லும் காரணமும் சரியானதுதான். சமூகம் வேலை அளிப்பதில்லை. தள்ளிவைத்து பயத்துடன்தான் பார்க்கிறது. மாற்றங்கள் சமூகத்தில்தான் முதலில் தேவை. பிறகுதான் திருநங்கைகளிடம்.

படித்தவர்களின் கடமைகள் நிறைய உண்டு. எங்களில் படித்தவர்களை பற்றித்தான் சொல்கிறேன். நாங்கள் நல்ல ரோல் மாடல்கள் ஆனால்தான் மாற்றங்கள் பலப்படும்.

Comments

தங்களின் வருத்தத்தில் நானும் உடன் படுகிறேன். அரசு இன்னும் கொஞ்சம் ஒத்துழைத்தால் பாலினத்தால் மாறுபட்டவர்களுக்கு உதவி செய்ய முடியும்