Thursday, April 24, 2008

புலிகள்... பிரபாகரன்....



தமிழீழ விடுதலை பற்றி எழுதவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் அங்கே கொல்லப்படும்போது இங்கேஅமர்ந்து யாகூவில் அரட்டை அடிக்கும் யுவதிகளில் நானும் ஒருத்தி என்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். பள்ளிப்பருவத்தில் பிரபாகரனின் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரே வீரத்தமிழன் அப்போது அவர்தான். தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. துப்பாக்கி விடுதலை தரும் என்று என்றும் நான் நம்பியதில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு தரும் என்பது எனது கருத்து. எத்தனை ரத்தங்கள, எத்தனை படுகொலைகள்... ஈழத்தில் பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படும் நிகழ்வுகள் கற்பனைக்கெட்டாத சோகங்கள்.




ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நானும் கோபப்பட்டேன். பிரபாகரன் இந்தியர்களின் முதுகில் குத்திவிட்டார் என்று அப்போது நினைத்தேன். பிரபாகரன் செய்தது சரியா தவறா என்று கேட்டால் ஒரு தமிழச்சி என்பதால் சரி என்பேன். ஒரு இந்தியப்பெண் என்பதால் தவறு என்பேன். தமிழர் எண்ணம் அதுதான்.
பெண் புலிகளை பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஆயுதம் தொட காரணம் என்ன? அவர்கள் வாழ்வில் நடந்த துயரங்களா அல்லது மண்ணின் மேல் உள்ள பற்றா? பெண்மையின் மென்மை அவர்களிடம் இன்னும் உண்டா? ஒரு திருநங்கையும் ஒரு பெண் புலியும் சந்தித்தால்....

5 comments:

தமிழன் said...

நானும் இந்தியன் தான் ஆனால் முதலில் தமிழன், உண்மையில் மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி இறப்பிற்கு புலிகள் மட்டும்தான் காரணமா அதை சொல்லுங்கள். அந்த சம்பவத்தை ஒரு முறை கண்மூடி சிந்தயுங்கள். அந்த சம்பவத்தில் இறந்தது திரு. ராஜீவ் காந்தி அவர்களும் அப்பாவிகளும் தானே.ஈழதமிழர் வாழ்வு மலர.

சிவசுப்பிரமணியன் said...

தங்களிடம் இருந்து வந்திருக்கும் புலிகளின் பதிவு பாராட்டுக்குறியது. யாஹூவில் அரட்டை அடிப்பது ஒரு பெரிய குற்றமல்ல. இந்த எண்ணம் ஒன்று போதும், அதை சரிகட்டிவிட. ராஜீவ்காந்தியின் மரணம் காலத்தின் கட்டாயம், துன்பியல் சம்பவம் - இது புலிகளின் தரப்பு வாதம். அதற்கான காரணங்கல் நாம் அறியாமல் இருக்கலாம். ஒரு விஷயத்தில் இரண்டு நிலைப்பாடு கொள்ளாதீர்கள் அது கவலைகுறிய விஷயம்.

தமிழன் மட்டும் தான் இவன் ஈழத்தமிழன், இவன் மலேசியத் தமிழன், இவன் கனடாத் தமிழன் என்று பிரித்து பேசுகிறான். வேறு யாராவது பேசி கேள்வி பட்டதுண்டா? எந்த ஒரு மலையாளியாவது இவன் லண்டன் மலையாளி என்றோ, எந்த ஒரு கன்னடனாவது இவன் மும்பைக் கன்னடன் என்றோ கூறி கேள்வி பட்டது உண்டா?

இதுதான் நமக்கிருக்கும் பலவீனம்.. இது நம் அறியாமையின் ஒரு பகுதி.. ஈழத்தில் வாழும் நம் சகோதரர்கள் அங்கிருந்து முளைக்கவில்லையே.. அவர்களின் மூதாதையர் நம் மண்ணைச் சேர்ந்தவர்களாக இருகும் போது எதற்கு இந்த பிரிவினையை நாம் உண்டாக்கியிருக்கிறோம்?

யோசியுங்கள் ச்கோதரி

காலம் said...

நான் எந்த வகையான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எஅனது எதிரிதான் தீர்மானம் செய்கிறான்

jagan said...

thangal aadhangam, ethir paarpugal anaithayum padiyhen. en mana nileyum athuthaan. maarum.., ellame maaru.., maaradhu engire vaarthayai thavire ellame maarum.

காலம் said...

கல்கி இப்போது எங்கு இருக்கிறீர்