பொம்மைகளுடன் விளையாடுவேன் !

பள்ளிப்பருவத்தில் நிறைய பொம்மைகளுடன் விளையாட மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்பா எனக்கு கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தாலும் பொம்மைகள் மட்டும் நிறைய வாங்கித்தரமாட்டார். அப்போதுவிளையாடிய பொம்மைகளில் இப்போது என் நினைவுகளில் உள்ளதெல்லாம் ரயில் பொம்மையும், துப்பாக்கி பொம்மையும்தான். சாவி கொடுத்தால் ஆடும் குரங்கு பொம்மை, காற்றடைத்த வாத்து பொம்மை, பஞ்சு பொம்மை, பாபி பொம்மை என்று நான் ஆசைப்பட்டதெல்லாம் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது அவற்றுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது. வெட்கப்படாமல் ஒவ்வொன்றாக வாங்கி கண்டிப்பாக விளையாடுவேன்.

Comments

கல்கி,

விளையாடுவதற்கு வயது வரம்பில்லை. எவ்வயதிலும் விளையாடலாம். மனது மகிழ்கிறதென்றால் விளையாட்டுப் பொருள்களை வாங்கி விளையாடலாம்.

நல்வாழ்த்துகள்