Friday, July 24, 2009

புன்னகை

புன்னகை என்ற இந்த மூன்று நிமிட படம் திருநங்கைகளின் வாழ்வில் மகிழ்ச்சியான சில நொடிகளின் பதிவு. திருநங்கை கல்கியால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய குட்டிப்படம்.

திருநங்கைகளுக்கு அர்ப்பணம்.


Sunday, July 19, 2009

நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

  • திருநங்கைகளின் நலனில் அக்கறைகொண்டு எங்களின் சமூகமேம்பாட்டுக்காக நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். நூற்றாண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் சமூகத்தின் அனைத்து நிலைகளினும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்திற்காக நலவாரியம் அமைத்ததன் மூலம் தமிழக அரசு இந்தியாவின் பிறமாநிலங்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஒரு பெருமைமிகு முன்னோடியாக திகழ்கிறது.
  • இருசாரர் பயிலும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்களில் மூன்றாம்பாலின சேர்ப்பு, திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் உணவுவிநியோக அட்டை, திருநங்கைகளுக்கு இலவச பால்மாற்று மருத்துவ அறுவை சிகிச்சை, இவ்வாண்டின் மாநில நிதி அறிக்கையில் திருநங்கைகளுக்கு 1 கோடிக்கு தொகுப்புவீடுகள் ஒதுக்கீடு என்று தொடர்ந்து திருநங்கைகள் நலனில் அக்கறைகொண்டு நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழகத்தின் அனைத்து திருநங்கைகள் சார்பாக மகிழ்ச்சியினையும், பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • தமிழக திருநங்கைகள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மூன்றாம்பாலின மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து எமது உரிமைபோராட்டத்திற்கு தோள் கொடுத்துவரும் அன்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களுக்கு அனைத்து திருநங்கைகள் சார்பாக சகோதரி பவுண்டேஷன் மூலம் எமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

    அன்புடன்,

    கல்கி
    இயக்குநர்/நிறுவனர்
    சகோதரி பவுண்டேஷன்
    (திருநங்கைகள் சமூக, பொருளாதார மேம்பாட்டு தொண்டு நிறுவனம்)
    மேற்கு சைதாப்பேட்டை,
    சென்னை - 600 015
    மின்னஞ்சல்: aurokalki@gmail.com
    இணையதள்ம்: www.sahodari.org